இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

#Covid 19
Keerthi
4 years ago
இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 524,078 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,229 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,761 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4