ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் - 100 ஆக அதிகரித்த உயிரிழப்பு!

#Afghanistan
Prasu
4 years ago
ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் - 100  ஆக அதிகரித்த உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழுகையில் இருந்த 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் குந்தூஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு மசூதியில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தான் சமீபத்தில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறிய பின், அங்கு நடந்த கொடூரமான தாக்குதல் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4