அமெரிக்க - சீன அதிபர்கள் 'ஒன்லைன்' வாயிலாக சந்திப்பு

#world_news #United_States
அமெரிக்க - சீன அதிபர்கள் 'ஒன்லைன்' வாயிலாக சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையிலான சந்திப்பு இந்த ஆண்டு இறுதிக்குள், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றபின், அமெரிக்கா - சீனா இடையிலான உறவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைவான் மீது சீனா படைகளை ஏவுவது, தென் சீன கடல் பகுதியில் அத்துமீறல் உட்பட பல்வேறு விவகாரங்களில் சீனாவை அமெரிக்காஎச்சரித்து வந்தது.

இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களும் கடந்த மாதம் தொலைபேசி வாயிலாக பேசினர். இதையடுத்து, இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நேரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.அதன்படி ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஸுரிச் நகரில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் எந்தெந்த விவகாரங்களில் சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை என்பது குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது. மேலும் ஹாங்காங், தென் சீன கடல் பகுதி, தைவான் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

ஆறு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க - சீன அதிபர்கள் 'ஆன்லைன்' வாயிலாக சந்தித்து பேச உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4