விண்வெளியில் இருந்து பூமியை ரசிக்கும் சுற்றுலா திட்டம் தொடக்கம்

Prasu
4 years ago
விண்வெளியில் இருந்து பூமியை ரசிக்கும் சுற்றுலா திட்டம் தொடக்கம்

விண்வெளியில் இருந்து பூமியை ரசிக்கும் சுற்றுலா திட்டத்தை குறைந்த கட்டணத்தில் வேர்ல்டு வியூ நிறுவனம் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நாட்டின் அரிசோனாவை தளமாகக் கொண்டது வேர்ல்டு வியூவ் (World View) என்னும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் பலூன் தொழில்நுட்பம் கொண்டு வாடிக்கையாளர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வெப்ப காற்றில் இயங்க கூடிய பலூன்களை போல் இல்லாமல், ஹீலியம் வாயுவை பயன்படுத்தி பலூனை மெல்ல மெல்ல பல்லாயிரம் அடி உயரங்களுக்கு பறக்கவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு முதல் இந்த சுற்றுலா சேவையை தொடங்க உள்ளதாக வேர்ல்டு வியூவ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சுற்றுலா சேவை திட்டத்தின் முற்கட்டமாக சீன பெருஞ்சுவர், எகிப்து பிரமிட், அமேசான் காடுகள் உள்ளிட்ட பிரபல இடங்களை விண்ணிலிருந்து பார்க்க செய்யும்படி வேர்ல்டு வியூ திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பயணமானது ஆறு முதல் எட்டு மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளனர்.

அதோடு பயணிகளை குறைந்தது 1,00,000 அடி (30,000 மீட்டர்) உயரத்திற்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த வகையிலான வெர்ஜின் கெலக்டிக் (Virgin Galactic) , புளு ஆரிஜின் (Blue Origin) உள்ளிட்ட நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்ல 2,00,000 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கின்றனர். இந்த நிலையில் பலூனில் சென்று பார்க்கும்படி திட்டமிட்டுள்ள வேர்ல்டு வியூவ் நிறுவனம் 50,000 டாலர்கள் நிர்ணயித்து இருப்பது வரவேற்க்கதக்கதாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4