கருக்கலைப்புக்கு தடை விதித்த தீர்ப்பை வரவேற்ற வெள்ளைமாளிகை

Prasu
4 years ago
கருக்கலைப்புக்கு தடை விதித்த தீர்ப்பை வரவேற்ற வெள்ளைமாளிகை

அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்துக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தை ஆளும் குடியரசு கட்சியால் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. மேலும் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியின் மாவட்ட நீதிமன்றத்தில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராபர்ட் பிட்மேன் கடந்த புதன்கிழமை அன்று கருக்கலைப்பு சட்டத்துக்கு அதிரடியாக தடை விதித்துள்ளார்.

மேலும் 113 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் ராபர்ட் பிட்மேன் கூறியதாவது, "செப்டம்பர் 1 ஆம் தேதி கருக்கலைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் அரசியல் சாசனத்தின் மூலம் பாதுகாக்கப்படும், பெண்கள் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை கொண்டுள்ளது சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பினை நீதிமன்றம் இன்னும் ஒருநாள் கூட அனுமதிக்காது" என கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரவேற்றுள்ளது. அதோடு பெண்களின் அரசியல் சாசன உரிமைகளை மீட்டெடுக்க கூடிய முக்கியமான நடவடிக்கையாக இது விளங்குகிறது என்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்தது. இருப்பினும் கருக்கலைப்புக்கு எதிரான குழு இந்த தீர்ப்புக்கு விமர்சனம் தெரிவித்தது. அதோடு நீதிபதிகளும் கருக்கலைப்பு தொழிலுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டெக்சாஸ் மாகாணத்தின் சார்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4