சண்டைக்கு பின் நமீதா முகத்தில் சிரிப்பு... காரணமாகும் பிரியங்கா

Prabha Praneetha
4 years ago
சண்டைக்கு பின் நமீதா முகத்தில் சிரிப்பு... காரணமாகும் பிரியங்கா

விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.

இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும்.

மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

இதுவரை இசைவாணி, சின்ன பொண்ணு, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி, மதுமிதா மற்றும் நமீதா ஆகியோர் தங்களது கதையை கூறியுள்ளனர். இதனால் தினமும் நிகழ்ச்சி சோகமாக சென்று கொண்டிருக்கிறது.

பிரியங்கா, இமான் அண்ணாச்சி மற்றும் ராஜு ஆகியோர் இந்த நிகழ்ச்சியினை சற்று கலகலப்பாக கொண்டு செல்கின்றனர்.பிரியங்கா ஒருபடி மேலே சென்று பிக் பாஸை "பெருசு" என கூறி கலாய்த்து வருகிறார்.

இதனால் பிரியங்காவிற்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இமான் அண்ணாச்சி போல செய்து காட்டி அவரையே சிரிக்க வைக்கிறார்.

அப்போது நமீதா, மேக்அப் செய்வது போலவும், இசைவாணி சாப்பிடுவது போலவும் வேடிக்கையாக செய்கிறார்.

பின்னர் பிரியங்கா பேசுவது போல செய்து காட்டும் இமான், கேமராவை பார்த்து யோவ் பெருசு? கேட்கிறதா? என கிண்டல் செய்கிறார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் ஜாலியாக இருக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4