சமகி ஜன பலவேகயா கட்சி எனக்கு சொந்தமானது! என்னை விரட்ட முடியாது: டயானா

#Sajith Premadasa #Samagi Jana Balawegaya
Prathees
4 years ago
சமகி ஜன பலவேகயா கட்சி எனக்கு சொந்தமானது! என்னை விரட்ட முடியாது: டயானா

சமகி ஜன பலவேகயா கட்சியின் உண்மையான தலைவர் நான்தான் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

இன்று கட்சியின் தலைவர் என்று கூறுபவர்கள் அதை அவரிடமிருந்து சட்டவிரோதமாக எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சாமகி ஜன பலவேகயகட்சியின்  தலைவர்கள் என்று கூறுபவர்கள் ஜோக்கர்கள் என்று கமகே நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.

"இது எனது கட்சிஇதொலைபேசி எனது கட்சியின் சின்னம், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எனது கட்சியைப் பயன்படுத்த நான் அனுமதித்துள்ளேன்.

னக்குத் தெரிவிக்காமல் எப்படி என்னை என் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியும். கட்சியின் செயற்குழு என்னை வெளியேற்ற முடிவு செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த முடிவு குறித்து நான் சில செயற்குழு உறுப்பினர்களிடம் விசாரித்தேன், அவர்கள் என்னை வெளியேற்றியது பற்றி தெரியாது என்று கூறினார்கள்.

இந்த நகைச்சுவை தொடர்ந்தால் கட்சிக்குள் நிலவும் பிளவுகளை நான் வெளிப்படுத்துவேன் என்று அவர் கூறினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4