மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை! - கணவன் கைது

Reha
4 years ago
மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை! - கணவன் கைது

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை மாவட்டம், புளத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா வீதி, கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய பெண்ணின் கணவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4