பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது மோதிய டிப்பர் வாகனம்

#Mannar #Police #Accident
Prathees
4 years ago
பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது மோதிய டிப்பர் வாகனம்

மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது   டிப்பர் வாகனம் மோதியதில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் (09) காலை 10 மணியளவில் சரணடையச் சென்ற ஐந்து இளைஞர்களே குறித்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விபத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவே இடம் பெற்றுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் மற்றும் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் டிப்பர் மற்றும் சாரதியை தேடும் பணி மன்னார் பொலிஸாரால் இடம் பெற்று வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4