மிக குள்ளமான பாடி பில்டர்- கின்னஸில் இடம் பிடித்து உலக சாதனை

Keerthi
4 years ago
மிக குள்ளமான பாடி பில்டர்- கின்னஸில் இடம் பிடித்து உலக சாதனை

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ப்ரதிக் விட்டல் மோஹித் மிக குள்ளமான பாடி பில்டர் என்னும் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ப்ரதிக் விட்டல் மோஹித், சுமார் மூன்றரை அடி உயரம் மட்டுமே உடையவர். இவர் மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபட்டு காணபட்டாலும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு மோஹித்தின் நண்பர் ஒருவர் பரிந்துரைப்படி அவர் பாடி பில்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

முதலின் பல தோல்விகளை சந்தித்த மோஹித், பல கட்ட பயிற்சிக்கு பின் 2016 ஆம் ஆண்டு முதல் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது மிக குள்ளமான பாடி பில்டர் என்னும் கின்னஸ் உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4