IPL PlayOff 01 - சென்னை அணிக்கு 173 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயித்த டெல்லி அணி

Prasu
4 years ago
IPL PlayOff 01  -   சென்னை அணிக்கு 173  ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயித்த டெல்லி அணி

ஐபிஎல் தொடரில் இன்று இடம்பெற்று வரும் முதலாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல் அணிகள் விளையாடி வருகின்றன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி சென்னை அணிக்கு 173 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டெல்லி அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பிரிதிவ் ஷா 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சிம்ரொன் ஹெட்மயர் 37 ஓட்டங்களையும், ரிஷப் பான்ட் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4