பிரான்ஸ் கொரோனா வைரஸ் : இன்றைய நிலவரம்!

#world_news #Covid 19 #France
பிரான்ஸ் கொரோனா வைரஸ் : இன்றைய நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான நாளாந்த தொற்று மற்றும் மருதுவமனை நிலவரங்களை பொது சுகாதார துறை மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ளது.

3,991 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 7,056,511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று வீதம் தொடர்ந்தும் 1% வீதமாகவே உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. 6,737 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் சாவடைந்துள்ளனர். இதுவரை மொத்த சாவு எண்ணிக்கை 117,052 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 90,203 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4