இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்!
#SriLanka
#AnuraKumaraDissanayake
#Navy
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
.இதற்கமைய இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட ஜூலை முதலாம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே