நீங்கள் சுவிஸில் ZFC உடன் KFC ஐ வைத்து குழப்பமடைந்ததுண்டா?

#world_news #Switzerland
நீங்கள் சுவிஸில் ZFC உடன் KFC ஐ வைத்து குழப்பமடைந்ததுண்டா?

பாரிய அமெரிக்க துரித உணவு சங்கிலி, KFC யானது ZFC அதாவது Zurich fried Chicken என்ற நகரத்தில் உள்ள ஒரு சிறிய கடையுடன் தங்கள் விற்பனை நிலையங்கள் குழப்பமடைகிறதாக முடிவு செய்துள்ளது.

ZFC இன் உரிமையாளர் 52 வயதான அஹ்மத் சயீத் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து கடிதங்களை பெறத்தொடங்கினார். 28 பிலியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டும் அமெரிக்க நிறுவனத்தினால், சயீத் அவரது கடையின் பெயரையும் தட்டச்சுஎழுத்து வடிவத்தையும் மாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதனால் குழப்பம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நிறுவனம் கவலையடைகிறது.

அதன் நிமித்தம் சிறு தொழிலதிபர் தனது இலச்சினையை மாற்றுவதாக கூறுகிறார். ஆனால் அதை ஒரே இரவில் செய்ய முடியாது என்றும் அவர் கடையின் அடையாளத்தை மாற்றி தனது குறிப்புக்களை மீண்டும் அச்சிட வேண்டியிருக்குமாகையால் தனக்கு அதிகம் செலவாகும் என்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4