பால் தேநீர் மற்றும் உணவு பார்சலின் விலை அதிகரிப்பு

#prices
Prathees
4 years ago
பால் தேநீர் மற்றும் உணவு பார்சலின் விலை அதிகரிப்பு

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்  பால் தேநீர் மற்றும் உணவுப் பார்சலின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படிஇ ஒரு கப் பால் தேநீர் மற்றும் உணவுப்  பார்சலின் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியதாவது, 

எரிவாயு விலை உயர்வு காரணமாக. தயக்கத்துடன்  விலைகளை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டதாக  தெரிவித்தார்.

 அனைத்து உணவுப் பார்சல்களின் விலையும் 10 ரூபாய் அதிகரித்துள்ளது - (காய்கறிகள், முட்டை, மீன் இறைச்சி உணவுகள், கொத்து)

பால் தேநீர் 10 ரூபாய் அதிகரிக்கும் மற்றும் சாதாரண தேநீரின் விலை மாறாது.

 தின்பண்டங்களின் விலையில் உயர்வு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4