பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசி இன்று முதல்

#Covid Vaccine
Prasu
4 years ago
பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசி இன்று முதல்

18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று(15) கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 24,000 பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4