பிரான்ஸில் உச்சத்தை தொட்டுள்ள எரிவாயு விலை! - வரும் நாட்களில் பதிலளிப்பதாக மக்ரோன் விளக்கம்!

#world_news #France
பிரான்ஸில் உச்சத்தை தொட்டுள்ள எரிவாயு விலை! - வரும் நாட்களில் பதிலளிப்பதாக மக்ரோன் விளக்கம்!

எரிவாயுவின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை Seine-Saint-Denis மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம், ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. ‘குறுகிய கால நடவடிக்கை’ ஒன்றை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன், ‘வரும் நாட்களில் இது தொடர்பாக’ அறிவிக்கப்படும்!’ என உறுதியளித்தார்.

எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்து, மக்களிடையே பெரும் கோபம் எழுந்துள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் மஞ்சள் மேலங்கி போராட்டம் போன்ற சமூக கொந்தளிப்புகள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசு இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. வரும் நாட்களில் பதிலளிப்போம்!” என ஜனாதிபதி மக்ரோன் தீர்க்கமாக பதிலளித்தார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4