மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனி வழி?

Prabha Praneetha
4 years ago
மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனி வழி?

மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ‘வெற்றிலை’ சின்னத்தின் கீழ் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டணியில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமையிலான கட்சியினரையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

கூட்டணி அமைக்கும் நடவடிக்கை வெற்றியளிக்கும் பட்சத்தில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தயாசிறி ஜயசேகர போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4