இந்தியா டூ கனடா: ஏர் கனடா விமானத்தின் முக்கிய அறிவிப்பு!

#world_news #Canada
இந்தியா டூ கனடா: ஏர் கனடா விமானத்தின் முக்கிய அறிவிப்பு!

டெல்லியில் இருந்து ரொறன்ரோவுக்கு செல்லும் ஏர் கனடா விமானங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.

கனடா சமீபத்தில் தான் இந்தியாவில் இருந்து வர மற்றும் இந்தியாவுக்கு செல்லும் நேரடி விமான சேவையை கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

மொண்ரியல் - டெல்லியை இந்த சேவையானது இணைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொண்ரியலில் வளர்ந்து வரும் இந்திய சமூகத்திற்கு ஏர் கனடா வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை வழங்கவுள்ளது.

இதோடு கூடுதலாக, ரொறன்வோவில் இருந்து டெல்லிக்கு விமான சேவை அக்டோபர் 15 முதல் வாரத்திற்கு 10 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.

ஏற்கனவே டெல்லியில் இருந்து வான்கூவர் மற்றும் ரொறன்வோவுக்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4