வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இளைஞன் யாழ்ப்பாணத்தில் மரணம்!

#Jaffna
Yuga
4 years ago
வெளிநாட்டிலிருந்து   நாடு திரும்பிய  இளைஞன் யாழ்ப்பாணத்தில்   மரணம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சியின் சாவகச்சேரியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சாவகச்சேரியின் மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்திருந்தது.

படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நிரோஷ் (வயது 24) என்றும் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்தவர் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4