Missed call  ஆல் காணாமல்போன சிறுமி 

#Police #Investigation
Prathees
4 years ago
Missed call  ஆல் காணாமல்போன சிறுமி 

10 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் காணாமல் போனதாக பெண்ணொருவர் அளித்த முறைப்பாட்டினையடுத்து  பயாகலை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிக்கிரியதுர நெலுகா சந்தனி என்ற 40 வயதான பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

களுத்துறை மாவட்டத்தில்  மக்கோன பிரதேசத்தில் உள்ள கோடல்ல பகுதியில் வசிக்கும் அவர் சம்பவதினமன்று காலை 9.15 மணியளவில் கடைக்குச் சென்று வீடு திரும்பியபோது தனது மகளை காணவில்லை என்றும் மகளைக் கண்டு பிடித்துத் தருமாறும் முறைப்பாடு செய்ததாக 
களுத்துறை மாவட்டத்தில்   பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

குறித்த சிறுமி ஒன்லைனில் படிப்பதற்காக தாய் மொபைல் போனை வாங்கி கொடுத்துள்ளார்.

குறித்த தொலைபேசிக்கு மற்றொரு தொலைபேசியில்  இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்ததாகவும் அது தற்போது வரை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4