பூ எடுக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

#Death #Police
Prathees
4 years ago
பூ எடுக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில்  உள்ள கஹட்டபிட்டிய குளத்தில் பூ பறிக்கச் சென்ற 14 வயதுடைய இரு சிறுவர்கள் இன்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சிறுவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மடுல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கொல்லாதெணிய, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்களே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மடுல்ல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4