நிதி மோசடி வழக்கிலிருந்து ​அமைச்சர் பசில் விடுவிப்பு

#Basil Rajapaksa #Court Order
Prathees
4 years ago
நிதி மோசடி வழக்கிலிருந்து ​அமைச்சர் பசில் விடுவிப்பு

திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்நாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

திவி நெகும திணைக்களத்திற்கு சொந்தமான ரூ .36.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தே இவர்களை விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு நிதியை மோசடி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகைகளை 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். 

இரண்டு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்பப் பெறுவதற்கான சட்டமா அதிபரின் முடிவை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பாலல்லே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4