எல்லோரும் புத்தராக முடியும்!

#Buddha
Prathees
3 years ago
எல்லோரும் புத்தராக முடியும்!

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நாம் அனைவருமே நீடித்த மகிழ்ச்சியை அடையவே விரும்புகிறோம், மிக அர்த்தமுள்ள மற்றும் தர்க்க ரீதியில் யதார்தத்தில் அந்த இலக்கை அடைய பயணிக்கிறோம். புதிதாக வாங்கும் சில பொருள்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மகிழ்ச்சிக்கான உண்மையான மூலாதாரம் நமது சொந்த மனம்தான்.

நம்முடைய அனைத்து திறன்களையும் முழுவதும் மேம்படுத்தி நம்முடைய குறைபாடுகளை வெல்ல முடிந்தால், நாமும் புத்தராக மாறலாம், மகிழ்ச்சிக்கான இந்த் மூலாதாரம் நமக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் சொந்தம்.

நாம் அனைவரும் புத்தர்களாக முடியும், ஏனெனில் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் முழு செயல்பாட்டுக் காரணிகள் இலக்கை அடைய நமக்கு உதவுகிறது. நாம் அனைவரும் புத்த இயல்பு கொண்டவர்கள்.

நாம் அனைவரும் புத்தர்களாக மாற முடியும் என்று புத்தர் உறுதியாகக் கூறினார், ஆனால் உண்மையில் அவர் கூறியதன் அர்த்தம் என்ன? யார் ஒருவர் தன்னுடைய குறைபாடுகளை நீக்கி, தன்னுடைய குறைபாடுகளை சரி செய்து, தன்னுடைய திறன் அனைத்தையும் உணர்கிறாரோ அவரே புத்தர்.

ஒவ்வொரு புத்தரும் நம்மைப் போன்று தொடங்கியவர்களே, யதார்த்தத்தைப் பற்றிய குழப்பம் மற்றும் நம்பத்தகாத கணிப்புகள் காரணமாக சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் தொடர்ச்சியான சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

தங்களுடைய பிடிவாதமான கணிப்புகள் உண்மையில் யதார்த்தத்திற்கு ஒத்துப்போவதில்லை என்பதை உணர்ந்து, தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உறுதியால், அவர்களின் மனம் பிரதிபலிக்கும் கற்பனைக்கு ஏற்ப செயல்படுவதை தானாக நிறுத்துகின்றனர்.

இடையயூறான உணர்வுகள் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் அனுபவங்களை நிறுத்திக்கொண்டு துன்பங்களில் இருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்கின்றனர்.

இதன் மூலமாக அவர்கள் தங்களுடைய நேர்மறை உணர்வுகளான அன்பு மற்றும் இரக்கத்தை வலுப்படுத்துவதற்காக செயல்படுகின்றனர், மேலும் தங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுகின்றனர்.

சேயின் மேல் தாய்க்கு இருக்கும் ஒரு விதமான அன்பை போல் எல்லோரிடத்திலும் அதை மேம்படுத்துகின்றனர். எல்லோரிடத்திலும் செலுத்தும் இந்த ஆழ்ந்த அன்பு மற்றும் இரக்கத்தின் சக்தி மற்றும் விதிவிலக்கின்றி எல்லோருக்கும் தீர்வு ஏற்படும் வகையில் உதவுதல், அவர்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்வதை மேலும் மேலம் வலுப்படுத்துகிறது.

இது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுகிறது, அவர்களின் மனமானது எல்லோரும் எல்லாமும் தனக்காக மட்டுமே என்று ஏமாற்றும் தோற்றத்தை கற்பனை செய்வதைக் கூட நிறுத்தி விடுகின்றன. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு இருக்கிறது என்பதை எந்தத் தடையுமின்றி அவர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

இந்தச் சாதனையின் மூலம் அவர்கள் ஞானமடைகின்றனர்: அவர்கள் புத்தர்களாகின்றனர். அவர்களின் உடல், தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் அவர்களின் மனம் எல்லா வரையறைகளில் இருந்தும் விடுபடுகிறது.

தான் கற்பிப்பதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஏதோ விளைவு ஏற்படுகிறது என்பதை அறிந்து கொண்டு, எல்லா உயிர்களுக்கும் தங்களால் இயன்ற அளவில் யதார்த்தத்தில் உதவ முடியும். ஆனால் புத்தர் சர்வ வல்லமையும் படைத்தவர் அல்ல. திறந்தமனதுடன், ஆலோசனைகளை ஏற்று அதனை பின்பற்றுபவர்களிடம் மட்டுமே புத்தரால் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நரம்பியல் என்பது நியூரோபிளாஸ்டிசிட்டி பற்றி பேசுகிறது – வாழ்நாள் முழுமைக்குமான புதிய நரம்பியல் பாதைகளை மாற்றும், மேம்படுத்தும் மூளையின் திறன். உதாரணத்திற்கு இடது கையைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியானது முடமாகிப்போனால், முடநீக்கியல் பயிற்சியினால் மூளையில் புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்கி வலது பக்கத்தை பயன்படுத்த உதவ முடியும்.

அதீத மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான புதிய நரம்பியல் பாதைகளை இரக்கம் போன்ற தியான முறையால் உருவாக்க முடியும் என்று அண்மை ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே வெறுமனே மூளையின் நரம்பியல் மேம்பாடு மற்றும் வளர்ச்சியான நியூரோபிலாஸ்டிசிட்டி பற்றி மட்டும் பேசாமல், மனதின் நெகிழ்த்தன்மை குறித்தும் பேச வேண்டும்.

உண்மையில் நம்முடைய மனம் மற்றும் அதன் மூலம் நம்முடைய ஆளுமைப் பண்புகள், நிலையாகவும் சரியாகவும் இருப்பதில்லை, புதிய நேர்மறைப் பாதைகளை மேம்படுத்த தூண்டப்படலாம், இதுவே நாம் ஞானம் பெற்ற புத்தர்களாக மாறுவதற்கான அடிப்படையான காரணியாக நமக்கு உதவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!