அவுஸ்திரேலியாவில் 14 கங்காருக்களை அடித்தே கொன்ற சிறுவர்கள் கைது!

#Australia
Keerthi
4 years ago
அவுஸ்திரேலியாவில் 14 கங்காருக்களை அடித்தே கொன்ற சிறுவர்கள் கைது!

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் இருவர் 14 கங்காருக்களை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள லாங் பீச்சில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் ஐந்து பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகவும் ,6 மாதங்களே ஆன  கங்காரு குட்டியொன்று  காயமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் ஏழு பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் Maloneys Beach பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சிறுவர்கள் இருவரும்  அக் கங்காருக்களை அடித்தே கொன்றுள்ளதாகவும்  விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4