கொலை செய்யப்பட்ட மெய்வல்லுநர் வீராங்கனை

#Murder
Prasu
4 years ago
கொலை செய்யப்பட்ட மெய்வல்லுநர் வீராங்கனை

கென்யாவில் மெய்வல்லுநர் வீராங்கனை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டின் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையான எக்னஸ் டிராபி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளர். இந்த நிலையில் எக்னஸ் டிராபி தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கணவரால் கூர்மை வாய்ந்த ஆயுதத்தினைக் கொண்டு எக்னஸ் டிராபியை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக கொலைசெய்யப்பட்ட எக்னஸ் டிராபியின் கணவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து தலைமறைவான எக்னஸ் ட்ராபியின் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக எக்னஸ் டிராபி இதுவரை இரண்டு முறை உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயந்திலும் நான்காவது இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4