கட்டுநாயக்க வந்த உகாண்டா பெண்ணின் வயிற்றில் நூறு கொக்கெயின் மாத்திரைகள்

#Arrest #Airport
Prathees
4 years ago
கட்டுநாயக்க வந்த உகாண்டா பெண்ணின் வயிற்றில் நூறு கொக்கெயின் மாத்திரைகள்

கொக்கெயினுடன் இலங்கைக்கு வந்த உகாண்டா பெண் ஒருவர் நேற்று (15 ம் திகதி) இலங்கை சுங்க விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

அவர் உகாண்டாவிலிருந்து டோஹாஇ கட்டார் வழியாக கட்டார் ஏர்வேஸ் விமானம் ஞசு 664 இல் நேற்று காலை 9.00 மணிக்கு இலங்கைக்கு வந்துள்ளார்.

45 வயதான உகாண்டா பெண், தனது வயிற்றில் கொக்கெயின் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தமை விமான நிலைய சுங்க போதைப்பொருள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் வாயிலில் குறித்த பெண்ணை  சோதனை செய்தபோது  பெண்ணின் அடிவயிற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெயின் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறினார்.

குறித்த பெண்ணின் வயிற்றில்  100 மாத்திரைகள் இருப்பதாகவும்  இதுவரை 51 மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுங்க போதைப்பொருள் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த பெண் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4