கிளிநொச்சியில் நடுகை செய்யப்பட்ட  தென்னங்கன்றுகளை பிடுங்கிச் சென்ற திருடர்கள் 

#Kilinochchi
Prathees
4 years ago
கிளிநொச்சியில் நடுகை செய்யப்பட்ட  தென்னங்கன்றுகளை பிடுங்கிச் சென்ற திருடர்கள் 

கிளிநொச்சி முகமாலை வடக்குப் பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான தென்னங்கன்றுகள் நேற்று முன்தினம் (14) இரவோடு இரவாக திருடர்களால் பிடிங்கி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாலை பிரதேசத்தில்  மீள் குடியேற்றத்தை தொடர்ந்து கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவுற்று குறித்த காணியில் சுமார் 1,200 தென்னைகள் மீள் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இரவோடிரவாக திருடர்களால் 100 க்கு மேற்பட்ட  தென்னங்கன்றுகள் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காணி உரிமையாளர் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4