வெளிநாட்டவாின் மோசடியில் சிக்கிய இலங்கை பெண்

#Arrest #Police
Prathees
4 years ago
வெளிநாட்டவாின் மோசடியில் சிக்கிய இலங்கை பெண்

இலங்கையில் உள்ள பெண் ஒருவரிடமிருந்து 129000 ரூபா பெற்று மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவரொருவர் நுகேகொடை பிரதேசத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்ட நபர் லெசோதோ நாட்டைச்சேர்ந்த   33 வயதான ஒருவரெனக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக நட்பினை ஏற்படுத்திய சந்தேகநபரான வெளிநாட்டவர், தனக்கு வெளிநாட்டிலிருந்து டொலர் பொதியொன்று கிடைத்துள்ளதாகக்கூறி அப்பெண்ணிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கணினிக் குற்ற விசாரணைப் பிரிவினால் சந்தேகநபரான வெளிநாட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிசை பகுதியில் ஆடை வர்த்தகராகச் செயற்பட்டுவந்துள்ளார் என்றும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4