ஒரே நாளில் 20 பில்லியன் ரூபாவை அச்சிட்ட அரசாங்கம்!

#government #Central Bank
Reha
4 years ago
 ஒரே நாளில் 20 பில்லியன் ரூபாவை அச்சிட்ட அரசாங்கம்!

இலங்கை மத்திய வங்கி நேற்று மட்டும் 20 பில்லியன் ரூபாவை அச்சிட்டிருப்பதாக மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பணநோட்டுக் கடதாசிகளை அச்சிடும் வெறும் இயந்திரமாக மட்டும் மத்திய வங்கி மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நேற்று மாத்திரம் 19.63 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டிருப்பதோடு ஜனவரி மாதம் தொடக்கம் நேற்றுவரை இந்த அரசாங்கத்தினால் 138768 கோடி ரூபாவுக்கு நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை 17804 கோடி ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக ரஜித் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4