எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

#history
Prathees
3 years ago
எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்து விட்டது.

தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத் தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே பிரமிடு என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.

Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர்.. எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்  என்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!