தீபாவளிச் செய்தியில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் இருக்குமாறு பிரதமர் ஹரிணி அழைப்பு
#SriLanka
#PrimeMinister
#Festival
#LANKA4
#DIwali
#Harini Amarasooriya
#L4
Prasu
18 minutes ago
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது தீபாவளிச் செய்தியில், தீபாவளிப் பண்டிகையானது “இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையின் வெற்றியையும்” குறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது வெறுப்பு, பொறாமை மற்றும் அறியாமையை நீக்கி, ஞானத்தையும் கருணையையும் தழுவிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களிடையே பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்த தீபாவளி ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதை வலியுறுத்திய அவர், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன், அனைத்து இந்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி, நல் ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்கட்டும் என்றும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.