இருவேறு விபத்துக்களில் மூவர் பரிதாப உயிரிழப்பு!

#SriLanka #Death #Accident
Prasu
4 years ago
இருவேறு விபத்துக்களில் மூவர் பரிதாப உயிரிழப்பு!

இரு வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதுப்பக சந்திக்கு அருகில் ஓட்டோ ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது மோதி பிரதான வீதியில் தூக்கியெறிப்பட்டு பிரதான வீதியில் பயணித்த வானொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டோ சாரதி மற்றும் ஓட்டோவில் பயணித்த பெண் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 70 வயது பெண்ணே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பில் வானின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, வத்தளை, மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய கண்டி வீதி, தெல்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று, புனரமைக்கப்பட்டு வரும் பாலம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பீப்பாயின் மீது மோதி அவ்வீதி வழியாக வந்த இரண்டு ஓட்டோக்களுடனும் ஒரு மோட்டார் சைக்கிளுடனும் மற்றும் லொறி ஒன்றுடனும் மோதி எதிரே இருந்த மதில் மீதும் மோதியுள்ளது

விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ ஒன்றின் சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளனர்.

ஹோமாகம, கம்பஹா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 31, 38 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கவனயீனமாக இருந்த லொறியின் சாரதி ஆகியோரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4