ஆற்றை தூய்மைப்படுத்திய 11 மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

Prasu
4 years ago
ஆற்றை தூய்மைப்படுத்திய 11 மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 21 மாணவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் பலியாகினர். இந்தோனேஷியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கு ஆற்றை சுத்தப்படுத்தும் பணிக்கு 150 மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் சிலியூர் ஆற்றின் கரைப் பகுதியில், தண்ணீரில் தவறி விழுந்து விடாமல் இருக்க கைகளைக் கோர்த்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு மாணவன் திடீரென தண்ணீரில் தவறி விழுந்து விட, அவனது கைகளை பிடித்து கொண்டு நின்றிருந்த அடுத்தடுத்த மாணவர்கள் என மொத்தம் 21 மாணவர்கள் ஆற்றில் விழுந்தனர். இவர்களில் 10 மாணவர்கள் மீட்கப்பட்டனர். மற்ற 11 மாணவர்கள் ஆற்றில் மூழ்கினர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4