WCT20 - ஹசரங்கவின் அதிரடி ஆட்டத்தால் 171 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி

Prasu
4 years ago
WCT20 - ஹசரங்கவின் அதிரடி ஆட்டத்தால்  171  ஓட்டங்களை குவித்த இலங்கை அணி

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, தற்போது அபுதாபியில் இடம்பெற்றுவரும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பெதும் நிஸங்க 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, அயர்லாந்து அணிக்கு 172 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4