பிரான்ஸ், பரிசை சூறையாடிய Aurore புயல்! - 130 மரங்கள் வரை முறிந்து விழுந்து பலத்த சேதம்!!

#world_news #France
பிரான்ஸ், பரிசை சூறையாடிய Aurore புயல்! - 130 மரங்கள் வரை முறிந்து விழுந்து பலத்த சேதம்!!

புதன்கிழமை-வியாழக்கிழமைக்கு உட்பட்ட இரவில் பரிசில் மிக மோசமாக தாக்கிய Aurore புயல் பல சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது.

கிட்டத்த 130 மரங்கள் பரிசில் முறிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக 13 ஆம் மற்றும் 16 ஆம் வட்டாரங்களில் புயல் மிக மோசமாக தாக்கியுள்ளது. 19 ஆம் வட்டாரத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பல மகிழுந்துகள் மீது மரம் முறிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, பரிஸ் தவிர இல் து பிரான்சின் பிற மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக Val-de-Marne, Hauts-de-Seine மாவட்டங்களையும் புயல் சூறையாடிச் சென்றது. மின்சாரமும் தடைப்பட்டது. (*மின்சார இணைப்புகள் அனைத்தும் தற்போது சீரடைந்துள்ளன.)  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4