பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவி வீட்டின் அறையிலிருந்து சடலங்களாக மீட்பு

#Death
Prasu
4 years ago
பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவி வீட்டின் அறையிலிருந்து சடலங்களாக மீட்பு

காலியில் வீடொன்றிலிருந்து, பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் மற்றும் மனைவி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதுடைய ஆணும், 38 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டின் அறையொன்றின் கட்டிலில் கையில் பூச்செண்டுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளதுடன், அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உயிரிழந்தவர்கள் கணவன், மனைவி எனவும், இவர்கள் விவாகரத்துப் பெற்று சுமார் ஐந்து வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4