வெளிநாடுகளுக்கு 20 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா நன்கொடையாக வழங்கி உள்ளது.

#world_news #United_States
வெளிநாடுகளுக்கு 20 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா நன்கொடையாக வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் 4.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7.2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 20 கோடி தடுப்பூசி டோஸ்களை வெளிநாடுகளுக்கு அமெரிக்கா இதுவரை நன்கொடையாக வழங்கி உள்ளது.இதன் வாயிலாக 100க்கும் மேற்பட்ட நாடுகள் பயனடைந்து உள்ளன. உலக அளவில் தடுப்பூசிகளை அதிகம் நன்கொடை அளிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.
இது குறித்து சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பின் அதிகாரி சமந்தா பவர் கூறியதாவது:

இந்த 20 கோடி தடுப்பூசி டோஸ்கள், லட்சக்கணக்கான மக்களின் உடல்நலத்தை பாதுகாத்துள்ளதோடு, அவர்களுக்கு நம்பிக்கையும் அளித்துள்ளன. இன்னும் நாங்கள் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகளுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4