பேராசிரியர் பர்வீன் சுல்தானுடன் முன்னணி பேச்சாளர்கள் பலரும் சுவிசில், அகில உலக கம்பன் விழாவில்.... 

Reha
4 years ago
பேராசிரியர் பர்வீன் சுல்தானுடன் முன்னணி பேச்சாளர்கள் பலரும் சுவிசில், அகில உலக கம்பன் விழாவில்.... 

2021 கான அகில உலக கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா சுவிஸில் நடைபெறுகின்றது.

எதிர்வரும் 29, 30, 31  அக்டோபர் 2021 வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 

இவை பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், நூல் வெளியீடு என்பன இடம் பெறுகின்றன. 

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பிக்க தென்னிந்தியாவில் இருந்து பேராசிரியர் பர்வீன் சுல்தான்,  இரா திருநாவுக்கரசு I P S,  முனைவர் இரா பிறையா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் இன்னும் பல முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொண்டு மூன்று நாட்களாக சிறப்பிக்க  உள்ளனர்.

மற்றும் நாட்டிய அரங்கம், இசை நிகழ்ச்சி என்பனவும் நடைபெற இருக்கின்றன. 

இந்த நிகழ்ச்சிகள் பல வருடங்களின் பின் நடைபெறுவதால் தமிழர் வாழ்வில் மிகச் சிறந்த நாளாக அமையும் என கருதப்படுகின்றது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது. அகில உலக கம்பன் கழகம்.
                                                                பிரவேசம் இலவசம் 
நாள்-- 29 30 31 அக்டோபர் 2021 சனி வெள்ளி சனி ஞாயிறு 
              மாலை 15.00 மணியிலிருந்து 
இடம்--ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகம் 

Edikerstrasse 24, 

8635 Durnten (ZH)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4