நாடு முழுவதும் சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்

Reha
4 years ago
நாடு முழுவதும் சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்

நாடு முழுவதும் மரக்கறி விலையும் விரைவில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பொருளாதார மையம் நாட்டின் மரக்கறித் தேவையில் 70 சதவீதத்தை விநியோகிக்கிறது கடந்த 21ம் திகதி முதல் மரக்கறி விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதன்படி, மலையகப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலை கிலோ ஒன்று 200 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4