சிங்கப்பூர் செல்ல உள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Reha
4 years ago
சிங்கப்பூர் செல்ல உள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் விதித்த பயணத்தடையை அந்நாட்டு அரசாங்கம் நீக்கவுள்ளது.

இதன்படி வருகின்ற 27ஆம் திகதியிலிருந்து இலங்கை, பங்களாதேஸ், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான்  உட்பட 14 நாடுகளின் பயணிகள், சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த பயணிகள் 4ஆம் வகை எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருப்பார்கள், இதில் 10-நாட்கள் வீடுகளிலேயே தங்கியிருத்தலும் அடங்கியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4