இலங்கையில் நேற்று மட்டும் 18 கொரோனா மரணங்கள் மொத்தம் 13 ஆயிரத்திற்கும் மேல்

Nila
4 years ago
இலங்கையில் நேற்று மட்டும் 18 கொரோனா மரணங்கள் மொத்தம் 13 ஆயிரத்திற்கும் மேல்

நாட்டில் நேற்று  (23 .10.2021) கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 10 ஆண்களும் 08 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்  04 ஆண்களும், ஒரு  பெண்ணுமாக 05 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 06 ஆண்களும் 06 பெண்களுமாக 12  பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,611 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4