சட்டவிரோத பொருட்களுடன் 6 பேர் கைது

Prabha Praneetha
4 years ago
சட்டவிரோத பொருட்களுடன் 6 பேர் கைது

பல்வேறு இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு, முகத்துவாரம் பகுதியில், 5 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயினுடன் 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பொரளை - கோதமிபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, முகத்துவாரம் - டவலசிங்காராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கம்பஹா, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனட்டியன பிரதேசத்தில் 560 லீற்றர் மதுபானத்துடன் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குருநாகல், பொல்காஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நாரம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல், திவுல்கஹகொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கி, கட்டுத்துவக்கு, தோட்டாக்கள் என்பவற்றுடன் குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4