போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

Prabha Praneetha
4 years ago
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

டீசலின் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,எரிபொருள் விலை அதிகரிப்பானது பேருந்து கட்டணங்கள் தொடர்பான பிரச்சினையில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4