பாடசாலைகளுக்கு அருகில் இன்றிலிருந்து பொலிஸார் இல்லை! - அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

Reha
4 years ago
பாடசாலைகளுக்கு அருகில் இன்றிலிருந்து பொலிஸார் இல்லை! - அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

பாடசாலைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் அதிகாரிகளை இன்றிலிருந்து இனிமேல் நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஆசிரியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடந்த 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த ஆசிரியர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அந்த இரண்டு நாள்களிலும் பாடசாலைகளுக்கு அருகாமையில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, ஆசிரியர் – அதிபர்கள் குழுவினருக்குப் பணிக்கு வர வேண்டாம் என மிரட்டியவர்களுக்குப் பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4