AppZ Makers (pvt) Ltd நிறுவனத்தின் எட்டு ஆண்டு காலப்பயணம் .

Tech
4 years ago
AppZ Makers (pvt) Ltd நிறுவனத்தின் எட்டு ஆண்டு காலப்பயணம் .

இன்றைய நவீன உலகில் தொழிநுட்பம் என்பது வெற்றிக்கான திறவுகோலாக உள்ளது. அந்தவகையில் மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் தேவைப்பாடானது அளவிடமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது. இத்துறையில் AppZ Makers (pvt) Ltd தனியார் நிறுவனம் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் தனது சேவையை வழங்குகிறது. எமது அபிவிருத்தி சேவைகள் தனித்துவமானவையாக அமைவதுடன் கணிணி, கைபேசி உபகரணங்களுக்கானதாகவும் , இணைய சந்தைப்படுத்தல் முறைமைக்கும் என எல்லா வகையிலும் பொருந்திப்போகக் கூடியதாக அமையப்பெறுகிறது.

AppZ Makers  தனியார் நிறுவனத்தின் தொடக்கப்பயணமானது எதிர்பாராத விதமான திருப்பமாகும். 2012 ஆம் ஆண்டு திரு. செந்தூரன் செல்வகுமாரன் என்பவரால் தொடங்கப்பட்டது. அதற்கான முதன்மைக் காரணமாக அமைந்தது  இவரிடம் கற்கும் மாணவர் ஒருவருக்கான கற்பித்தலின் போது எழுந்த சிந்தனையாகும். ஒரு மாணவனின் எதிர்காலம் நோக்கியதான கேள்வி திரு. செந்தூரன் செல்வகுமாரனுக்கு ஏற்படுத்திய தாக்கம் தனியாக  ஒரு தகவல் தொழில்நுட்ப  நிறுவனத்தை உருவாக்கும் எண்ணத்தைத் தோற்றுவித்தது. 

இந்த நிறுவனம் கைத்தொலைபேசிக்கான செயலி, இணையத்தளத்துக்கான செயலி, இணைய வர்த்தகம், விற்பனைப்பீட செயலி ( POS), மனிதவள முகாமைத்துவம் மற்றும் சம்பளத்திட்ட முறைமை போன்ற பல செயலிகளை  இலங்கை மற்றும் சர்வதேச சந்தைத் தேவைக்கு  ஏற்ப விருத்தி செய்து வழங்குகிறது. 

ஒவ்வொருவரதும் தேவையை நிறைவு செய்வதே நிறுவனத்தின் நிலையான தத்துவமாகும். வாடிக்கையாளரின் தேவைக்கேற்பவும் தயார்நிலையிலும் பிரத்தியேக வியாபார தேவைக்கு ஏற்ப எமது உற்பத்திகள் அமையும். தரமான உற்பத்திப் பொருளும் விற்பனைக்கு பின்னான தரமான சேவையுமே வெற்றியின் தாரக மந்திரமாகும். 

ஆரம்பம் முதல் இன்றுவரை AppZ Makers நிறுவனத்தின் வளர்ச்சி உறுதியானதாகவுள்ளது. இப்போது உணவு விநியோகப் பொறிமுறையை கணணி மயப்படுத்துவதில் எமது அதிகளவான கவனத்தை குவித்து வருகிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4