மூன்று விபத்துக்களில் பெண் உட்பட மூவர் பலி

Reha
4 years ago
மூன்று விபத்துக்களில் பெண் உட்பட மூவர் பலி

மூன்று இடங்களில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக அநுராதபுரம், இபலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலன்வௌ வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு குடைசாய்ந்துள்ளதுடன் அருகிலிருந்த மின்சாரத் தூணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர், கல்வௌ வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார். கலகம்பருவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குருநாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு, மாதம்பே வீதி, பல்லேவெல பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று  மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி பாதசாரி ஒருவர் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், இரு மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களும் பாதசாரியும் காயமடைந்த நிலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது சிகிச்சை பலன்னிறி மரணமடைந்துள்ளார். குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது முதியவரே உயிரிழந்துள்ளார்.

குருநாகல் - கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் வீதி, தம்பதெனிய பகுதியில், குருநாகல் நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதுண்டு பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் தம்பதெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது  உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் விபரங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4