மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை பார்வையிட்ட அதானி

#Mannar
Prathees
4 years ago
மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை பார்வையிட்ட அதானி

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட்ட    10 பேர் கொண்ட குழுவினர் இரண்டு விசேட விமானங்கள் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி நேற்று  மாலை மன்னாருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் காற்றாலை மின் நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு ஹெலிகொப்டரில் கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினர் மன்னார் வந்தடைந்தனர்.

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை பார்வையிட்ட பின்னர் அவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4