சஜித் அணி எம்.பிக்கள் இருவர் விரைவில் 'பல்டி' - தொகுதி அமைப்பாளர் பதவி இராஜிநாமா

#SriLanka #Sajith Premadasa
சஜித் அணி எம்.பிக்கள் இருவர் விரைவில் 'பல்டி' - தொகுதி அமைப்பாளர் பதவி இராஜிநாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர், தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜிநாமா செய்துள்ளனர்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகிய இருவருமே, கட்சியில் வகிக்கும் பதவிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இவ்வாறு விலகியுள்ளனர்.
 
இது தொடர்பில் கட்சி செயலாளருக்குத் தெளிவுபடுத்தி அவர்கள் இருவரும் கடிதமும் அனுப்பிவைத்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்ட கூட்டத் தொடரின்போது இவ்விருவரும் அரசுடன் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4