மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

Prabha Praneetha
4 years ago
மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த மாவட்டங்களில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சாத்தியமான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

அதனடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாளை மறுதினம் அம்பாறை மாவட்டத்தில் கள விஜயங்களை மேற்கொள்ள இருப்பதுடன், கடற்றொழில்சார் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4